நாளை அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

நாளை அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளைதமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் விண்ணப்பித் திருக்கிறார்கள். முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தி அதன் பிறகு நேர்காணல் மூலம் நியமனம்நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டதேர்வான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நாளை காலை (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார். தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அந்தந்த மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:
ஆய்வக உதவியாளர் தேர்வை மாவட்ட அளவில் கண்காணிக்க இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் தவிர, மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.மேலும், மாவட்ட ஆட்சியர்களும் தேர்வு மையங்களை ஆய்வு செய்வார்கள். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி