அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்


பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் வேப்பங்காயை சாப்பிடுவது போல கசப்பான ஒன்றாகும். இதனை தவிர்ப்பதகாக அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும், குடும்ப சூழ்நிலையை
காரணம் காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது வாடிக்கையாக அரங்கேறி வருகிறது.
அதிலும் சிலர், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கிராமப்புறங்களில் பணியாற்ற செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இனிமேல், இதுபோன்று காரணங்களை கூறி கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவதை தவிர்க்க முடியாத வகையில் கர்நாடக அரசு புதிய சட்டம் கொண்டுவர முடிவு செய்து உள்ளது.
கிராமப்புற ஆசிரியர்களின் அவலநிலை
கர்நாடகத்தில் சுமார் 54 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் 3 லட்சத்துக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆசிரியர்களில் 15 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் பணியாற்றியது கிடையாது. மேலும் 2007-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் நகர்ப்புறங்களை விட்டு கிராமப்புறங்களில் பணியாற்றவில்லை.
இதற்காக அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணிமாற்றத்தை தவிர்த்து தங்களுக்கு ஏதுவாக உள்ள நகரப்பகுதியில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அந்த பகுதியிலேயே ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றுவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதுதவிர, கிராமப்புறங்களில் பணியாற்ற யாருக்கும் விருப்பம் இல்லாததால் அங்கு ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவு உள்ளது.
ஆசிரியர்களின் சுயநலம்
கர்நாடகத்தில் வடகர்நாடகம், ஐதராபாத் கர்நாடகம், கடலோர கர்நாடகம் பகுதியில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவு உள்ளது. இதனால் அந்த பகுதி மாணவ-மாணவிகள் உயர்தர கல்வி கிடைப்பதில் வஞ்சிக்கப்படுகிறார்கள். இது அரசு ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்கு விருப்பமின்மையே காரணம் ஆகும். ஆசிரியர் பணியை அனைவரும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். ஆனால், நகர்ப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் சுயநலத்தால், அந்த பகுதி மாணவ-மாணவிகள் தரமான கல்வி கிடைக்காமல் பள்ளிப் படிப்பை பாதியிலேயே துறக்க நேரிடுகிறது.
மாநில அரசு கிராமப்புறங்களில் டாக்டர்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்ததை போலவே, தற்போது கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீவிர பரிசீலனை
கர்நாடகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் சரிசமமான உரிமை கிடைக்க, கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அறிந்த கர்நாடக கல்வித் துறை மந்திரி கிம்மனே ரத்னாகர், கல்வி அதிகாரிகள், கல்வி பிரதிநிதிகளுடன் தீவிர பரிசீலனை நடத்தி வருகிறார். இதனால் கூடிய விரைவில் அனைத்து ஆசிரியர்களும் கிராமப்புற பள்ளிகளில் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசு இந்த சட்டத்தை கொண்டுவருவதன் மூலம், கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தீர்வதுடன், கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு தரமாக கல்வி கிடைக்கும். இதனால் கிராமப்புற மக்களும், மாணவ-மாணவிகளும் இந்த சட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

2 comments:

  1. Kiramangalay Indiavin Mudhukelumbu Endru Varnikkirom. Aanaal Attagaiya Kiramangalil Panipuriya anivarum Munvaravendum. Karnataka arasai pol annaithu manilangalilum sattam iyatravendum......
    VALAMAIYANA INDIA... VALIMAIYANA BARATHAM .... PADAIPPOM..

    ReplyDelete
  2. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
    உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

    அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.

    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    தற்போது....

    அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது

    (வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)

    (05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி