'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி

நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.அரசு, தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வே செய்யும் பணியை, நில அளவைத்துறை செய்கிறது. இத்துறையில், 'சர்வேயர்' பணியிடங்கள், 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன.
கடந்த
, 2013ல், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' மூலம், 432 'சர்வேயர்கள்' நியமிக்கப்பட்டனர். அவர்களில், 210 பேர், 'குரூப் - 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும், 60 சதவீத 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், விரைவு பட்டா மாறுதல், அம்மா திட்டங்களில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, 'பிர்க்கா சர்வேயர்', சார் - ஆய்வாளர் பணியிடங்களில், அதிகளவு இடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசுக்கு தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்வது,நிலங்களை உட்பிரிவுகளாக பிரிப்பது, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையில், நிலங்கள்கையகப்படுத்தும் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., மூலம், விரைவில், சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிர்க்கா சர்வேயர், சார் - ஆய்வாளர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆனால், சர்வேயர் பற்றாக்குறையால், அப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி