தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2015

தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு


தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய செயலாளராக பணியாற்றும் எம்.ஆசியா மரியம் நகராட்சி நிர்வாக துணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியாக (தேர்தல்கள்) பணியாற்றும் எஸ்.செந்தாமரை வேளாண்துறை கூடுதல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குனர் எஸ்.நடராஜன் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராகவும், பொது (தேர்தல்கள்) இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் எஸ்.சிவஞானம் அதே பதவியில் உயர் நிலையிலும் நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) பணியாற்றும் டி.ஆனந்த் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியாக (நிலம் மற்றும் எஸ்டேட்கள்) பணியாற்றும் ஆர்.கண்ணன் துணைஆணையர் (சுகாதாரம்) நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் கழக பொதுமேலாளராக பணியாற்றும் எல்.நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாக பணியாற்றும் ஏ.அண்ணாதுரை மண்டல துணை ஆணையராகவும் (தெற்கு) நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சியில் மண்டல துணை ஆணையராக (தெற்கு) பணியாற்றும் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் தமிழ்நாடு நீர்வடி மேம்பாட்டு முகமை செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி