919 பக்க தீர்ப்பின் விபவரம்: கடனை வருவாயாகக் கணக்கிடாமல்சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

919 பக்க தீர்ப்பின் விபவரம்: கடனை வருவாயாகக் கணக்கிடாமல்சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி இன்று காலை வழங்கினார். அவர் அளித்த 919 பக்க தீர்ப்பின் விபவரம்:

1. குற்றம் சாட்டபட்டவரின் சொத்துக்களுடன், நிறுவங்களின் மதிப்பு, கட்டுமான செலவும் அரசு தரப்பால் சேர்க்கப்பட்டுள்ளன.

2) இதன் மதிப்பு மட்டும் 27,79,88,945

3) இதுபோல், திருணம செலவும் சொத்து மதிப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6,45,04,222

4) இவை அனைத்தும் சேர்க்கும்போது மொத்த சொத்த மதிப்பு 66,44,73,573என்றாகிறது.

5) ஆகவே, மிகையாக சேர்க்கப்பட்ட திருமண செலவு, நிறுவன மதிப்பு, கட்டுமான செலவுகளை கழித்தால் உண்மையான சொத்து மதிப்பு 37,59,02,466.

6) வருமானம் = 34,76,65,654மொத்த சொத்து = 37,59,02,466வேறுபாடு (வருமானத்திற்க அதிகமான சொத்து) = 2,82,36,812

7) வருமானத்திற்க அதிகமான சொத்தின் சதவீதம் = 8.12%

8) கிருஷ்ணானந்த் அக்ரிஹேத்தி வழக்கில். வருமானத்திற்கு அதிகமான சொத்தின் சதவீதம் 10% வரை இருக்கும் பட்சத்தில் வழக்கிலிருந்து விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

9) ஆந்திர அரசு வருமானத்திற்கு அதிகமான சொத்தின் சதவீதம் 10லிருந்து 20% வரை இருப்பதை அனுமதிக்கலாம் என்று சுற்றறிக்கையே அனுப்பியுள்ளது.

10) ஆகவே குற்றம்சாட்டப்பட்டவரின் வருமானத்திற்கு அதிகமான சொத்தின் சதவீதம் 8.12% சதவீதம் என்பதால் அவர் விடுவிக்கப்படுகின்றார்.

11) குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் இந்த வழக்கில் குறைந்தபட்ச பங்கே என்பதால் அவர்களும் விடுவிக்கப்படுகின்றனர். என குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியன் வங்கியிடமிருந்து கடன் பெற்றார் என்றும், இதனை வருவாயாக நாம் சேர்க்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, கடனை வருவாயாகக் கணக்கிடாமல் சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒரு நீதிபதி அம்மா குற்றவாளி என்றும் மற்றொருவா் அமமா குற்றம்மற்றவர் என்றால் உண்மை கடவுளுக்குதான் வெளிச்சம்

    ReplyDelete
  3. நேற்றுவரை குமாரசாமி...,,
    இனிமேல் குபேரசாமி...,....

    ReplyDelete
  4. குன்கா 100 கோடியை நீதிமன்றத்தில் கட்ட சொன்னார்.

    ஜெயல்லிதா, குமாரசாமியிடம் கட்டிவிட்டார்.

    ReplyDelete
  5. ammavai vella yaralum mudiyathu

    ReplyDelete
  6. மரணம் என்ற ஒன்று வெல்லும்...

    ReplyDelete
  7. amma புகழ் சரித்திரம் பேசும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி