ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில், ஏற்கனவே துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி, தட்டு தடுமாறிதவிக்கிறது. வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு, ஆசிரியர்களை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. ஆங்கிலவழிக் கல்வி நடத்தும், பிரைமரி, நர்சரிகளுக்கு செல்லும் குழந்தைகளை கவரும் வகையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி துவக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.இரு ஆண்டுகளாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பலவற்றில் ஆங்கிலவழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனாலும், அதற்கென தனியாக ஆசிரியர்களோ, பிரத்யேக, ஏ.பி.எல்., அட்டைகளோ வழங்கப்படவில்லை.விரக்தி:இதனால், ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும், ஒரே வகுப்பறையில் அமர்த்தி, தமிழிலேயே பாடம் நடத்தும் நிலையே, அரசு தொடக்கப் பள்ளிகளில்காணப்படுகிறது. துவக்கத்தில், ஆங்கிலவழிக் கல்வி என, ஆர்வத்துடன் சேர்த்த பெற்றோரும், குழந்தைகள் ஆங்கிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது கண்டு, விரக்திக்கு உள்ளாகினர்.இந்நிலையில், கல்வியாண்டு துவக்கும் போது, பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.புதிதாக பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை துவக்க இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவு, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆங்கிலவழிக் கல்வி துவக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைநடத்தினால், தமிழ்வழிக் கல்வியில் மாணவர் எண்ணிக்கை சரிந்து விடுகிறது. எப்படியிருப்பினும், அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களே, உபரியாக உள்ளனர். அவர்கள்வழக்கம் போல, பாடம் நடத்துவதால், ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களிடம் எவ்வித முன்னேற்றமும் இருப்பதில்லை. இதனால், அரசு பள்ளியில், ஆங்கிலவழிக் கல்வி என்பதன் மீதான நம்பிக்கை மக்களிடம் குறைந்து வருகிறது.
மாற்றம்:
இதை போக்க, ஆங்கிலவழிக் கல்விக்கென தனி ஆசிரியர்கள், தனி சீருடை, பிரத்யேக ஏ.பி.எல்., அட்டை என, பள்ளியின் சூழலையும், மாணவர்களையும் மாற்றினால் மட்டுமே, ஆங்கிலவழிக் கல்வி மக்களிடையே எடுபடும். ஆனால், இதை எதுவும் செய்யாமல், பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை துவக்க உத்தரவிட்டால், பெயரளவில் மட்டுமே அவை நடத்தப்படும். இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை சரிவை தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி