696 தனியார் பள்ளிகளுக்குஆங்கில வழி கல்வி அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

696 தனியார் பள்ளிகளுக்குஆங்கில வழி கல்வி அனுமதி

கன்னடத்தில் பாடம் கற்பிக்க அனுமதி பெற்று, ஆங்கிலத்தில் கற்பித்த, மாநிலத்தின், 696 தனியார் துவக்க பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வமாக ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்க, கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
மாநில அரசு, 1994ல் மொழி கொள்கையை வடிவமைத்த பின், பள்ளிகள் துவங்கப்பட்டன. மாநில அரசின் இந்த மொழி கொள்கையை, 2014 மே 6ம் தேதி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.இதனால், கர்நாடகா உயர்நீதிமன்ற படியேறிய தனியார் பள்ளி நிர்வாகங்கள்,
கன்னட மொழி பள்ளியை, ஆங்கில மொழி பள்ளியாக மாற்ற, அனுமதிஅளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தன.விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், கடந்த பிப், 27ம் தேதி, தற்போதுள்ள கன்னட பள்ளிகளை, ஆங்கில பள்ளிகளாக அங்கீகரிக்கும்படி, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மே 20ம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படியும், கல்வித்துறைக்கு காலக்கெடு விதித்தது.இதையடுத்து, மாநிலத்தின், 696 தனியார் பள்ளிகளுக்கு, ஆங்கிலம் கற்பிக்க கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு, மைசூரு மாவட்டங்களில், ஆங்கில பள்ளிக்கு அனுமதி கேட்டு, 926 பள்ளிகள் விண்ணப்பித்தன. இதில், 277 பள்ளிகள் முழுமையான தகவல்களை தெரிவிக்காததால், இப்பள்ளிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும்படி, அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி