பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கணினி ஆசிரியர்கள் சார்பில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
கணினி அறிவியல் பாடத்தை ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கி, அதற்கு கணினி அறிவியலில் பி.எட். பட்டம் முடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதற்கு, தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கமாநிலச் செயலர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குழந்தைவேலு, ஒருங்கிணைப்பாளர் முருகேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச்செயலர் முருகன் உள்பட கணினி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி