ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு தனித்தனி வினாத்தாள் கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு தனித்தனி வினாத்தாள் கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


ஆய்வக உதவியாளர் பணித் தேர்வில் பழைய, புதிய எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டங்களுக்கு தனித்தனி வினாத்தாள் விநியோகம் செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக பள்ளிக் கல்விச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1989-ம் பதிவு செய்தேன். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங் கள் நிரப்பப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங் களை நிரப்புவது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி 21.4.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

இப்பணிக்கான எழுத்துத்தேர்வு வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.இத்தேர்வில் 130 வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டத் தில் இருந்தும், எஞ்சிய 30 வினாக் கள் பொது அறிவு வினாவாகவும் கேட்கப்படும் என்றும் கூறப்பட் டுள்ளது. அந்த வினாக்கள் தற்போதைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்தா? பழைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டத்தில் இருந்தா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

புதிய பாடத் திட்டத்தின் அடிப் படையில் தேர்வு நடத்தப்பட் டால் பழைய பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு பணி கிடைக் காது. எனவே அரசு பள்ளி களில் காலியாக உள்ள ஆய் வக உதவியாளர் பணியிடங் களை நிரப்புவது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண் டும். பழைய எஸ்.எஸ்.எல்.சி., புதிய எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டத்தின் அடிப்படையில் தனித் தனியாக வினாத்தாள் தயாரித்து எழுத்துத் தேர்வு நடத்த உத்தர விட வேண்டும் எனக் கூறப்பட் டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.கண்ணன் வாதிட்டார். இதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலர், நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி