ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஆண்டில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 1,129 காலியிடங்களுக்கு, 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வில், இந்த ஆண்டு, இரண்டு புதுமைகள் செய்யப்பட்டு உள்ளன. ஒன்று, யு.பி.எஸ்.சி., யின், www.upsconline.gov.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாது. அது போல,'ஹால் டிக்கெட்'டும், தபால் மூலம் கிடைக்காது.இரண்டாவது, ஐ.ஏ.எஸ்., பணிக்கு விண்ணப்பிக்கிறோமா, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கிறோமா என்பதை, விண்ணப்பம் செய்யும் போதே குறிப்பிட வேண்டியது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பம் அனுப்புவது, 23ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஆக., 23ம் தேதி, தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி