விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2015

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை

காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்குட்பட்ட இணைப்பு கல்லுாரிகளில், கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு நடந்தது
. விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலிருந்து பல்கலையின்தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன. தேர்வு துறை விடைத்தாளை மதிப்பீடு செய்ய தகுதியுடைய ஆசிரியர் பட்டியலை பாடவாரியாக தயார் செய்து, துணைவேந்தரின் அனுமதி பெற்று ஆசிரியர்களை விடைத்தாள் திருத்த அழைப்பார்கள்.அதற்கான ஆணை தபாலில் ரகசியம் (கான்பிடன்ஸியல்) என்று முத்திரையிடப்பட்டு அனுப்பப்படும். விடைத்தாளை மதிப்பீடு செய்பவர் யார்? என்ற விபரம் பிறருக்குதெரியக்கூடாது என்பதற்காக, இந்த நடைமுறை அனைத்து பல்கலை கழகங்களிலும் பின்பற்றப்படுகிறது.ஆனால், அழகப்பா பல்கலையின் அதிகார பூர்வ இணையதளத்தில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களின் பெயர், எந்த பாடத்திற்கு எந்த நாளில், எந்த இடத்தில் மதிப்பீடு செய்யப்படுகிறது, என்ற விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விடைத்தாளில் டம்மி நம்பர் இடப்பட்டாலும், மதிப்பீடு குறித்த பிற தகவல்கள் இணையதளத்தில் இடம்பெறுவது, தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மையை குலைப்பதாக அமைந்துஉள்ளது.அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டிய பல்வேறு தகவல்களை இணையதளத்தில் வெளியிடாமல், ரகசியம் காக்க வேண்டிய தேர்வுத்துறை தகவல்களை அழகப்பா பல்கலை வெளியிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்கலை நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, தேர்வுத்துறையின் ரகசிய தன்மையை காக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி