அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு


'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில் உள்ள விவரம்:மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை சட்டம் வழங்குகிறது. பணியின் போது ஊனமுற்றால், அவரை எந்த நிறுவனமும் வெளியேற்றக் கூடாது என, சட்டம் கூறுகிறது. அதனால், மருத்துவ ரீதியிலோ அல்லது ஊனம் காரணமாகவோ, அரசு பணியாளர் ஓய்வு பெற விரும்பினால், அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, தொடர்ந்து அதே ஊதியமும்,சலுகைகளும் கிடைக்க உறுதி அளிக்க வேண்டும். அவர் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும். அதையும் மீறி, ஒருவர் பணி ஓய்வு பெற விரும்பினால் மட்டுமே, அவரது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். உடல் ஊனத்தை காரணமாக கூறி, தகுதி குறைப்பு செய்யக் கூடாது. மாற்றுத் திறனாளி என்பதற்காகவே, அவருக்கான பதவி உயர்வை மறுக்கக்கூடாது.

இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், பலர், தன்விருப்ப ஓய்வு பெறுகின்றனர். அதனால், இச்சட்டம் குறித்து மாற்றுத் திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி