அசத்திய அரசுப் பள்ளி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

அசத்திய அரசுப் பள்ளி!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டைவடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியானது பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு வகுப்புகளிலும் 100% தேர்ச்சியைப் பெற்றுசாதனைப் படைத்துள்ளது.இப்பள்ளியானது உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக கடந்த2013ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
முதல் முறையாக 12ம் வகுப்பு மாணவர்களைப்பொதுத் தேர்வுக்கு அனுப்பிய இப்பள்ளி முதல் முயற்சியிலேயே 100% தேர்ச்சியைஅடைந்துள்ளது.மேலும் இப்பள்ளியில் முதுகலையில் 8 ஆசிரியப் பணியிடங்களுக்கு வெறும் 3 முதுகலைஆசிரியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ( 6 காலிப்பணியிடங்கள் )இச்சாதனையை இப்பள்ளி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளோடு அரசுப் பள்ளிகளை ஒப்பிட்டு அரசு பள்ளிகளைத் தரக்குறைவாகப் பேசும் பலநண்பர்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் இப்படியொரு அரசுப் பள்ளியின் சாதனை “கண்ணுக்குத் தெரியவில்லையா” ”இல்லை செவிக்குதான் எட்டவில்லையா”. நண்பர்களே!

இதுபோன்று எத்தனையோ அரசுப் பள்ளிகள் சாதித்துக்காட்டியுள்ளன. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரசுப் பள்ளிகளையும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களையும் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் மாணவர்கள் 6 மாதங்களில் படித்து இத்தகைய சாதனைகளைப் படைக்கின்றனர். ஆனால் சில பள்ளிகளில்………………………………………………………… (புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே ). இனியும் அரசுப் பள்ளிகளைக் கேவலமாகப்பார்க்காதீர்கள். முடிந்தால் ஆதரவு அளியுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை வீசாதீர்கள்.

100% தேர்ச்சி பெற்ற அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவண்
ப.இளையராஜா
முதுகலை ஆசிரியர்
அ.மே.பள்ளி.
தம்பிக்கோட்டை வடகாடு
தஞ்சாவூர் மாவட்டம்.

6 comments:

  1. ஆஹா....அருமை..அந்த அருமை ஆசிரியர்கள் மற்றும் மாணவச்செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உண்மையான வாழ்த்துகளுக்கு நன்றி

      Delete
  2. I am saluting the teachers and congratulating the students

    ReplyDelete
  3. singampunari govt school staffs ku sollunga, vathiyar velai paka sonna mudiyathunu soldravangala ena panna mudiyum??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி