துப்பட்டா நெசவு செய்யும் பணி தாமதம்:பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2015

துப்பட்டா நெசவு செய்யும் பணி தாமதம்:பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதில் சிக்கல்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.


கடந்த ஜனவரியில் திருவள்ளூர், வேலுார், நாமக்கல், சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பள்ளி சீருடைக்கான காடா துணிகளை வழங்கி இருக்கவேண்டும். ஆனால் கைத்தறித்துறையினர் காடா துணிகளுக்கு பதில் மாணவிகளுக்கான துப்பட்டா துணியை நெசவு செய்ய உத்தரவிட்டனர்.




இதில் கூலி கட்டுபடியாகாததால் நெசவாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் துப்பட்டா உற்பத்தி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின் கூலியும், உற்பத்தி அளவும் உயர்த்தப்பட்டதையடுத்து முழு வீச்சில் துப்பட்டா உற்பத்தி நடந்து வருகிறது.ஆனால் இருமாத போராட்டத்தால் கைத்தறி துறைக்கு வழங்க வேண்டிய துப்பட்டாவை வழங்க முடியாத நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.




இதனால் அடுத்தமாதம் பள்ளி திறக்கும் போது அனைத்து மாணவிகளுக்கும் துப்பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.கைத்தறி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நெசவாளர் போராட்ட காலங்களில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்ட ஈரோட்டில் விசைத்தறிகளில் நெசவு செய்து பள்ளிகள் திறக்கும் போது துப்பட்டாவோடு மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி