எளிமையான வருமான வரி படிவம் இம்மாத இறுதியில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

எளிமையான வருமான வரி படிவம் இம்மாத இறுதியில் அறிமுகம்


எளிமையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவம், இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என, தெரிகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2015 - 16ம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, கடந்த மாதம் வெளியிட்டது.
அதில், ஒருவருக்கு எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்பதையும், அவற்றில் உள்ள தொகை குறித்தும் தெரிவிக்கும் பிரிவு இடம் பெற்றிருந்தது. மேலும், கடந்தநிதியாண்டில் வெளிநாடு சென்றிருந்தால், பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கிய அலுவலகம், சென்ற நாடுகள், பயணங்களின் எண்ணிக்கை, பயணச் செலவுகள், அவற்றுக்கானநிதியாதாரம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் பிரிவும் காணப்பட்டது. இத்துடன், 'ஆதார்' எண்ணைக் குறிப்பிட, தனி பிரிவும் படிவத்தில் இருந்தது.இந்த விதிமுறைகள் கடுமையாக உள்ளதாக கூறி, எம்.பி.,க்கள், வரி வல்லுனர்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ''புதிய படிவம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; எளிமையான படிவம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.இது தொடர்பாக, நடப்பு பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின்னர், நிதியமைச்சக அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், செயல்படாமல் உள்ள வங்கி கணக்கு விவரங்களை கோரும் பிரிவை நீக்குவது உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதாக, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி