முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்


முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் வாள் சண்டை விளையாட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது என்றாரபெரம்பலூர்மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் முதன்மை நிலை விளையாட்டுப் பயிற்சி மையத்தில் வாள் சண்டை விளையாட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு 6, 7 மற்றும்8 ஆம் வகுப்புகளில் (10 முதல் 14 வயது வரை) சேரும் வகையில், விளையாட்டுத் திறன் மிக்க மாணவ, மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.உயரம் அதிகம் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் விருதுகள் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை. மேலும்,உணவு, தங்குமிடம், விளையாட்டுச் சீருடை, விளையாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். எந்தக் காரணம் கொண்டும் இடையில் வெளியேறினால் நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் கணக்கிட்டு பணம் திரும்பச் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் மே 15 ஆம் தேதி காலை 7 மணிக்கு"மேலாளர், முதன்மை நிலை விளையாட்டு மையம், அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை 600 003' என்ற முகவரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க வேண்டும். மேலும் 94433 76054, 74017 03516 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி