விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறி்த்து ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் 10கணினி விவர பணியாளர் காலிப்பணியிடம் உள்ளது. இப்பணியிடங்கள் முற்றிலும் தாற்காலிகமாகவும், மாதந்தோறும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாகும். இதற்குபிளஸ்2 தேர்ச்சி பெற்றும், தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இளநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதோடு, எம்.எஸ் ஆபிஸ் கணிப்பொறியில் சான்றிதழ்பெற்றி்ருப்பது விரும்பத்தக்கது. இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக வளாகத்திலும் மற்றும் www.chiefeducationalofficer.in என்ற முகவரியிலும் வருகிற 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற ஜூன்-6ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.அதைத் தொடர்ந்து இப்பணிக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 13-ம் தேதி ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட இருக்கிறது.அதனால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி