ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3.

இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதிய 245பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை தேடி தந்துள்ளார்கள்.
இப்பள்ளி தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது.மேலும் அறிவியல்,சமூக அறிவியல்,கணிதம் ஆகிய பாடங்களில் பெருவாரியான அளவில் சதம் அடித்து மாணவிகள் சாதனைபுரிந்துள்ளனர்.

அறிவியல்124 மாணவிகள் 100/100
சமூக அறிவியல்032 மாணவிகள் 100/100
கணிதம்021 மாணவிகள் 100/100

இக்கிராமப்புறப்பள்ளியில் 09 மாணவிகள் மூன்று பாடங்களில் 100/100 பெற்றிருப்பது சாதனைக்குரிய செயலாகும்.

சென்ற ஆண்டில் அறிவியல் பாடத்தில் 96 பேர் 100/100 மதிப்பெண்கள்பெற்றிருந்தனர்.இந்த ஆண்டு 124 மாணவிகள் இப்பாடத்தில் 100/100 மதிப்பெண்கள்பெற்றிருப்பது சிறப்புக்குரியது.

இது குறித்து இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்திரு S.R செந்தில்குமார் கூறியதாவது ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய மாணவிகளின் கல்வி ஈடுபாடுமிகமுக்கியக்காரணம்.இப்பள்ளியில் சனி,ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்நடைபெறும். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் மற்றும் பெற்றோர்ஆசிரியர் கழகமும் பாராட்டப்படவேண்டியவர்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி முன்னேற்றத்தை மட்டுமே தன் சிந்தையில் கொண்ட முதன்மைக்கல்விஅலுவலர் திரு.மா.இராமகிருஷ்ணன் அவர்களின் ஊக்கத்தாலும். பாராட்டினாலும் கிடைத்தவெற்றி இதுவாகும்.

இப்பள்ளி மென்மேலும் வளர கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி