கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பக்கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடுவதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கின்றனர்.அரசுக் கல்லூரிகளில் ரூ. 27-க்குவிண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில்,
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ரூ. 100, ரூ. 200, ரூ. 250 என்ற விலைகளில் விண்ணப்பங்கள் விற்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் உள்ள 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.விண்ணப்பங்களை வாங்க கல்லூரிகளில் மாணவர், பெற்றோர் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தன்னாட்சி கல்லூரிகளில் விண்ணப்பம் பெற வந்தவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அரசு கல்லூரிகளைப் பொருத்த வரை விண்ணப்பக் கட்டணம் ரூ. 25,பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுச் சென்றனர். ஆனால், எழும்பூரில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் ரூ. 100-க்கும், கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள கல்லூரியில் ரூ. 200-க்கும், செங்குன்றத்தில் அமைந்துள்ள கல்லூரியில் ரூ. 250-க்கும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து எழும்பூரில் உள்ள கல்லூரியில் விண்ணப்பம் வாங்க வந்த மாணவிகளின் பெற்றோர் கூறியது: விண்ணப்பிக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்பது சாத்தியமில்லாதது. எனவே, குறைந்தபட்சம் 3 கல்லூரிகளுக்காவது விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளோம்.ஆனால், கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக்கொள்கின்றனர். கல்லூரிக்குக் கல்லூரி கட்டணம் மாறுபடுகிறது. இதனால், வசதி குறைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, அனைத்துக் கல்லூரி விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி