எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: இன்று முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: இன்று முதல் விண்ணப்பம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை முதல் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படஉள்ளன.சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக்காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும்.சுகாதாரத்துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி