பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு


தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்திலேயே முதல் முதலாக தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வியாண்டில் (2015 - 16) நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். என்றபுதிய பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. இது, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (என்.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்றது.

இதில், இரு பாலரும் சேர்வதுக்கான கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில் இதர பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 40சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முதன்மைப் பாட அமைப்புகளையும், கணிதம், இயற்பியல்,கணினி அறிவியல் ஆகிய முதன்மைப் பாட அமைப்புகளையும் கொண்ட இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதேபோல, இந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு கால பி.எட்.பட்டப்படிப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி