இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

இன்னும் நான்கே நாள்...:
இந்த ஆண்டு காலியாக உள்ள இடங்களுக்கு, பணியிட மாறுதல் உத்தரவு பெற, ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தனர். வரும் 1ம் தேதி, பள்ளி திறக்க உள்ள நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது, ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்வர். குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.மாணவர்களுக்கு பாதிப்பு:பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம் பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்கும்.
ஒரே சிக்கல்...:
பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், 'சீட்' பெற முடியாத நிலையும் ஏற்படும். மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

25 comments:

  1. Asiriyar nalanil akkarai. Ellatha kodumai nadakkuthu

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. tamilnadu mathiri mosam engayum illai

    ReplyDelete
  4. tamilnadil ippo police karangalukkuthan mariyathai. teacher s ku illai

    ReplyDelete
  5. new posting (adw school) illai. tranfer counsiling illai. anna police mattum soluvanga.mattravagal nasamapona enna?

    ReplyDelete
    Replies
    1. Adw transfer councelling process is already on. Check with dist welfare officer.

      Delete
    2. yetho one nadakkaumla thalaiva

      Delete
  6. anyone want mutual transfer from perambalur,ariyalur,cuddalore dist to madurai please contact 9626765676

    ReplyDelete
  7. contact me for mutual english bt from perambalur,ariyalur,cuddalore dist to madurai or anyother district please contact 9626765676

    ReplyDelete
  8. I'm working as a sec grade asst at ramnad district.I want a mutual transfer to namakkal dt.contact 9486693470

    ReplyDelete
  9. பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுமா இல்லை என்றால் நடத்தாமலே இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. T NatrajanMay 27, 2015 at 5:57 AMசற்று பொறுத்துக்கொள்ளங்கள் அம்மாவின் வெற்றி்க்கு பிறகு காலியிடடங்கள் படிப்படியாக நிரப்படு்ம்....

      இங்கே பலர் பணி நியமனங்களை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்திருக்கும் வேளையில் மேற்கண்ட பொன்மொழிகளை உதிர்த்த -------ஏ

      உமக்கெல்லாம் கலந்தாய்வு ஒரு கேடா??????

      ஜால்ரா போடும் நீ(ங்கள்) பணி ஓய்வு வரை தர்மபுரியில் , உமது குடும்பம் கன்னியாகுமரியில் வாழ்ந்தாலும் இப்படியே தொடர் ஜால்லரா போடுவீரோ ???
      ஒரு ரூபாய் செலவில்லாமலே நீர் விரும்பும் பள்ளிக்கு (பணியிடம் இருந்தும் ) செல்ல உமது ஜால்லரா உதவும் எனில் தொடர்ந்து ஜிங் ஜக் ஜிங் ஜக் அடியும் ....

      மற்ற நண்பர்கள் யாரையும் குறிப்பிடவில்லை .....

      Delete
    2. Hi Ram sir How r u ?

      Be Cool... Ellam Nalamaga Amayum Ellorkum!!!

      Delete
    3. வணக்கம் யாதவ் ஜி ..
      நலம். எல்லாமும் நலமாக அமையட்டும் எல்லோருக்கும் எனத்தான் இறைவனிடத்தில் வேண்டுகிறேன் ....
      ஆனால் ஜால்லரா போடும் நபர்களை கண்டால் கட்டுப்படுத்த இயலாமல் போய் விடுகிறது ...
      உங்களோடு பேசி பல நாட்கள் ஆகி விட்டது . மறவா நாட்கள் உங்களோடு பேசியது

      Delete
  10. பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுமா இல்லை என்றால் நடத்தாமலே இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அம்மா உங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாகவே (பணம் வாங்கிகொண்டு)தான் செய்வார்கள் ..பொறுமை காக்க வேண்டும் நீங்கள் ...

      Delete
  11. கலந்து, ஆய்வு செய்வதாக இருக்க வேண்டும். இழந்து, ஓய்ந்து போவதாக இருக்கக் கூடாது..

    ReplyDelete
  12. I am working as a Eng. B.T. in pums elementary education dept. middle school at VIRALIMALAI NEAREST TO TRICHY(30KM) AND ALSO FOR PUDUKOTTAI PEOPLES. . I am willing to give mutual to the virudhunagar dist ,dindigul and madurai. If anybody pl.contact 8754079886 or 9865149705

    ReplyDelete
  13. I m working sg tech at dharmapuri dist (any time bus available ) anybody want to mutual transfer from Madurai, theni, dindigul, virudhunagar, sivagangai please contact 08885468754

    ReplyDelete
  14. 3 teacher social science 2 history 1 geography any G.O please help

    ReplyDelete
  15. DEAR ADMIN PLEASE HELP

    3 SOCIAL TEACHER

    POST ALOT RATIO 2 HISTORY 1 GEOGRAPHY ANY G.O

    PLEASE HELP

    Dear Admin & Friends

    please send my mail id

    raajali123@gmail.com

    thank you,

    ReplyDelete
  16. I am working as bt tamil at ariyalur dist(near thirumanur).my native virudhunagar dist.so i want to transfer to virudhunagar dt. Anybody want tranfer ariyalur dist from virudhunagar (mutual),please contact me.my mobile number 7667080622.

    ReplyDelete
  17. Hai friends I am hari working as a social BT at Sholingar, vellore dt anybody need mutual from thiruvallur dt pls contact me: 8939095222

    ReplyDelete
  18. Working as commerce pg in connoor.wanted transfer to coimbatore,tirupur,erode dist.any one plz contact @ram14144@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி