ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான விண் ணப்ப விநியோகம் நேற்றுதமி ழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடங் கியது. ஒவ்வொரு மாவட் டத்திலும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மற்றும் முதன்மை கல்வி அலு வலகத்தில் ஜூன் 4-ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பிளஸ் 2 பொதுத் தேர் வில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 35% மதிப்பெண் களும், மற்றவர்கள் குறைந் தது 45 % மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்க ளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும். விலை ரூ.500. ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற் றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும்.

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஐயப்பன் கூறும்போது, “சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெல் லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டை பனகல் மாளி கையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திலும் விண் ணப்பங்கள் கிடைக்கும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள் சேரலாம். விண்ணப்பங்கள் வாங்கிய உடன், மாணவர்களின் தகவல் கள் இணையத்தில் பதிவு செய்யப்படும். தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன் சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி