அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி களை தரம் உயர்த்தி, பாதுகாக்க வேண்டும் என்று கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை யில் நேற்று சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளனர்
.மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளை திறக்க வேண்டும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிக ரிக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார பயணம் நடைபெறுகிறது.சென்னையில் மே 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடை பெறும் பயணத்தைகோயம் பேடு மாநகராட்சி துவக்கப் பள்ளி அருகே கல்வியாளர்கள் வே.வசந்தி தேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோர் நேற்று காலை தொடங்கி வைத்தனர்.
கே.கே.நகர், விருகம்பாக்கம் பகுதி வழி யாக இந்த பயணம் மேற்கொள்ளப் பட்டது.அடுத்த மூன்று நாட்களில் நுங்கம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும்.தொடக்கவிழா நிகழ்ச்சியில் வசந்திதேவி பேசும்போது, “ஆட்சி யாளர்களின் முழு ஆதரவோடு தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தை மீறி செயல்படுகின்றன. அரசு பள்ளிகளை அரசே அழிக்கிறது.கல்வி உரிமைச்சட்ட விதிகளை தமிழகத்தில் உள்ள 90 சதவீத தனியார் பள்ளிகள்மீறுகின்றன” என்றார்.
விழிப்புணர்வு தேவை
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன் பேசும்போது, “தரமான ஆசிரியர்கள், பரந்த விளை யாட்டு மைதானங்கள் போன்ற விஷயங்களில் தனியார் பள்ளி களை விட அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு இந்த பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்துகி றோம்.ஏற்கெனவே திருவாரூர், தருமபுரி மாவட்டங்களில் சைக்கிள் பயணம் முடிவடைந் துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சாரப் பயணம் நடைபெறவுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி