பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும்முடிக்கலாம். பின், மூன்று ஆண்டுகளில்,
முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம். ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்கள், மூன்று ஆண்டுகளில்,பி.எட்., - எம்.எட்., பட்டம் பெற முடியும்.
இதன் மூலம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீக்கப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியராக விரும்புவோர், ஏழு ஆண்டுகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன், பி.எட்., எம்.எட்., படிப்புகளை யும் முடித்து விடலாம்.இத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, படிக்கும்போதே, பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பும் வழங்கப்படும்.தொலைதுார கல்வியில், பி.எட்., படிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி துறை செயலர் விருந்தா ஸ்வரூப் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி