வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடக்கம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடக்கம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் அவதி


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம்,கடந்த மூன்று நாட்களாகச் செயல்படாமல் முடங்கி உள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் ஆய்வக உதவியாளர் உட்பட பல்வேறு அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர், வேலைவாய்ப்பு அலுவலக விவரங்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் கணினி மயமாக் கப்பட்டு, ஆன் லைனில் இணைக் கப்பட்டுள்ளன. அதனால், தற் போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி படித்த மாணவ, மாணவிகள், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்குச் செல்லாமல் கல்வித் தகுதியை ஆன்லைன் மூலம் பதிவு செய்கின்றனர். இதற்காக, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம், tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதள முகவரியை, கூகுளில் பதிவிட்டால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் நுழையலாம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம்tnvelaivaaippu.gov.inமுடங்கி உள்ளது. தற்போது கல்வித்துறை மூலம், தமிழகம் முழுவதும் 4,600 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 676 பணியிடங்களுக்கும் தேர்வாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில், பதிவுமூப்பு விவரங்களை தெரிந்துகொள்ளவும், அவற்றை பதிவிறக்கமும் செய்கின்றனர். ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடங்கியதால் தமிழகம் முழுவதும் தேர்வாளர்கள், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமலும், வேலைவாய்ப்பு அலுவலக விவரங்களை தெரிந்துகொள்ள முடியாமலும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, பிளஸ் 2 கல்வித் தகுதியை ஆன்லைனில் பதிவுசெய்ய, இந்த முறை புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதை அப்லோடு செய் வதற்கான பரிசோதனை முயற்சி நடக்கிறது. அதனால், தமிழகம் முழுவதும் இப் பிரச்சினை உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி