பேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) மறக்காமல் இருப்பது மிக கடினமான செயல்களில் ஒன்று. இந்த கஷ்டத்தை போக்கும்விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கடவுச்சொல்லுக்குப் பதிலாக கேள்வி-பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.ஐ.ஐ.டி. காரக்பூர், டெக்சாஸ், ஆஸ்டின் மற்றும் இல்லினாய்ஸ், அர்பனா-சாம்பைனில் ஆகிய பல்கலைக்கழகங்கள் சேர்ந்து 'ஆக்டிவ்பாஸ்' என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர்.
இந்த புதிய முறை மூலம் நாம் தினந்தோறும் ஸ்மார்ட்போன், கணினியில் செய்யும் வேலைகள் அல்லது பயன்படுத்தும் விஷயங்களேயே கேள்விகளாக அமைத்து, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் கடவுச்சொல் இல்லாமல் ஸ்மார்ட்போன், கணினிகளை பயன்படுத்த முடியும்.உதாரணமாக இன்று காலையில் வந்த முதல் குறுஞ்செய்தி எது? என்ற கேள்வியை பதிவுசெய்யமுடியும். இந்த கேள்விக்கான பதில் ஸ்மார்ட்போன், கணினிகளுக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், இது மிகவும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மென்பொருளை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கொஞ்சகாலம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி