தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா




தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.
ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஐந்தாம் வகுப்பு மாணவர் ரஞ்சித் ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்றார்.ஏழாம் வகுப்பு மாணவி தனம் அபிராமி அந்தாதி பாடினார். எட்டாம் வகுப்பு மாணவி சோலையம்மாள் சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார். மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம் வகுப்பு மாணவி சொர்ணாம்பிகா உறுதி மொழி வாசிக்க எட்டாம் வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப ஒளியை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவர் கண்ணதாசன் ஏற்புரை வழங்கினார். விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சிகளை ஆறாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி தொகுத்து வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார். மாணவர் கார்த்திகேயன் ஆங்கிலத்தில் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில் ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவிகளிடம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி