நடப்பாண்டு முதல் ஜெஇஇ நுழைவுத் தேர்வு மூலம் தஞ்சாவூர் ஐஐசிபிடி-யில் மாணவர் சேர்க்கை: தொழில்நுட்பக் கழக இயக்குநர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

நடப்பாண்டு முதல் ஜெஇஇ நுழைவுத் தேர்வு மூலம் தஞ்சாவூர் ஐஐசிபிடி-யில் மாணவர் சேர்க்கை: தொழில்நுட்பக் கழக இயக்குநர் தகவல்


தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐசிபிடி) நிகழாண்டு முதல் ஜெஇஇ நுழைவுத் தேர்வு மற்றும் பொதுக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.இதுகுறித்து ஐஐசிபிடி இயக்குநர் கே.சிங்காரவடிவேலு நேற்று அளித்த பேட்டி:

மத்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் நாட்டில் உள்ள ஒரே தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இது. இங்கு உணவுப் பதப்படுத்துதல் துறையில் உயர் ஆராய்ச்சிகள், மேற்படிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பி.டெக்., எம்.டெக். மற்றும் பிஎச்.டி. உள்ளன.நிகழாண்டுக்கான (2015 -16) உணவுப் பதப்படுத்துதல் பொறியியல் (Food Process Engineering) பாடத்தில் பி.டெக். 40 மாணவர்களும், எம்.டெக். 10 மாணவர்களும், பிஎச்.டி. 5 மாணவர்களும், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் (Food Science and Technology) எம்.டெக். 10 மாணவர்களும் சேர்வதற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.கடந்த ஆண்டு வரை மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நிகழாண்டு முதல் பி.டெக். சேர்க்கைக்கான விதிமுறைகள் ஐஐடி, என்ஐடி நிறுவனங்களில் நடைபெறும் பொது கலந்தாய்வு மூலம் நடைபெறவுள்ளது.

சேர விரும்பும் மாணவர்கள் ஜெஇஇ முதன்மை (JEE Main) நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் சேர்த்து தயாரிக்கப்படும் அகில இந்திய ரேங்க் அடிப்படையில் மத்திய இட ஒதுக்கீடு வாரியம் (Central Seat Allocation Board - CSAB) www.csab.nic.in நடத்தவுள்ள இணையதள கலந்தாய்வுமுறையைப் பின்பற்ற வேண்டும். கலந்தாய்வின்போது ஐஐசிபிடி மற்றும் பி.டெக். உணவு பதப்படுத்துதல் பொறியியல் படிப்புக்கான குறியீடை (code) தேர்வு செய்ய வேண்டும். எம்.டெக். மற்றும் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகம்…

2009-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 3 பேட்ஜ் மாணவர்கள் படித்து வெளியேறியுள்ளனர். அனைவரும் படிக்கும்போதே வேலைவாய்ப்புபெற்றுள்ளனர். பலர் ஐஐஎம் மற்றும் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்கு சென்றுள்ளனர்.

உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பதிவு பெற்ற நிறுவனங்ளுக்கு 2,300 உணவுப் பதப்படுத்துதல் பட்டதாரிகளும், 2.300 உணவு தொழில்நுட்பவியலாளர்களும், பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு 1 லட்சம் பேரும் தேவை. இந்த தொழிலில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன” என்றார் சிங்காரவடிவேலு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி