சென்னை ஐ.சி.டி. இணை உறுப்பினராக கலசலிங்கம் பல்கலை. தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2015

சென்னை ஐ.சி.டி. இணை உறுப்பினராக கலசலிங்கம் பல்கலை. தேர்வு


சென்னையில் உள்ள அகில இந்திய தகவல் மற்றும் தொடர்பு பயிற்சி கழகத்தின்(ஐ.சி.டி) இணை உறுப்பினராக விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஐ.சி.டி. டெரிடெரி மேலாளர் வி.பூர்ணபிரகாஷ், கல்வி நிறுவன உறவு மேலாளர் என்.நரேந்திரகுமார் ஆகியோரை துணைவேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். மேலாளர் வி.பூர்ணபிரகாஷ், வேந்தர் க.ஸ்ரீதரனிடம் ஐ.சி.டி. இணை உறுப்பினருக்கான கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். மேலும் அவர் கூறுகையில்: கலசலிங்கம் பல்கலைக்கழகத்தை ஐ.சி.டி.யின் இணைஉறுப்பினராக தேர்வு செய்ததன் மூலம், இங்குள்ள மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயன்படும் செயல்பாடுகள் ஐ.சி.டி. சார்பில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். ஐ.சி.டி.யின் புதிய கண்டு பிடிப்பு மையம், ஆரெக்கிள் கணினி பயிற்சி மையம், ஐ.சி.டி. ஆராய்ச்சி மலரில் பேராசிரியர்களின் பங்கு, மாணவர்களுக்கு தொழிற்சாலை பயிற்சி முதலியவை வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். இதில், வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன், நிதி காப்பாளர் இளமாறன் உள்ளிட்டோர் கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி