ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு உரிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிடாத தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்.6 ன் படி அறிவித்த அனைத்து துறைசார்ந்த பள்ளிகளுக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டு பணி நியமனம்செய்த தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஒடுக்கப்பட்டமக்களின் குழந்தைகள் பயிலும் இந்த ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் நிரப்பவேண்டிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாதது சற்று வருத்தம் அளிக்கிறது.
ஒரு சிலரால் தொடுக்கப்பட்ட வழக்கை காரணம் காட்டி தேர்வு பட்டியலைவெளியிட மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைவழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கான (468 Sc &Sca) ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாததின் காரணம் புரியாத புதிராகவேஉள்ளது. ஆகவே விரைவில் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடவில்லை எனில் இந்தஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியை வஞ்சிக்கும் தமிழக அரசின் கீழ் இயங்கும்ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் பெருமக்களை ஒன்றிணைத்து சென்னையில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
மேலும் வழக்கில் இடைக்கால தீர்ப்பாக 70% பணியிடங்களுக்கு மட்டுமே தடையாணைவிலக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 30% பணியிடங்களும் ஆதிதிராவிட சமூகத்திற்கேகிடைக்க உரிய முயற்சிகளை மேற்கொண்டு வழக்கினை விரைந்து முடிக்கவும் அரசு உரியஆவன செய்யவேண்டும்.இந்த பணிக்காக நாமும் பல்வேறு கட்ட இன்னல்களை கடந்து விடாமுயற்சியால் பெற்றஇந்த தீர்ப்பினை செயல்படுத்தாத தேர்வு வாரியத்தின் மீது அதிருப்தியும்,அவநம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
ஆசிரியர் சொந்தங்களே தனியே போராடிய நமக்கு தற்பொழுது கைகொடுக்க பலர் முன்வந்துள்ளனர். அவர்களோடு நாமும் போராடி நமது பணியை நமதாக்குவோம். ஆசியர் தேர்வு வாரியம் விரைவில் பட்டியலை வெளியிடவில்லையெனில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டத்திற்கு தயாராகுவோம்.
நீதி கிடைக்கும் வரை போரடலாம் ஆனல் இதையுயம் அரசியல் ஆக்கவேண்டாம்
ReplyDeleteநீதி கிடைக்கும் வரை போரடலாம் ஆனல் இதையுயம் அரசியல் ஆக்கவேண்டாம்
ReplyDeleteவணக்கம் ஆசிரிய சகாக்களே..! ஆசிரியர் தேர்வு வாரியம் வருகின்ற திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமைக்குள் தேர்வு பட்டியலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்கள்..! ஆகவே நாம் அதுவரை பொறுமையுடன் காத்திருப்போம் அவ்வாரத்தில் பட்டியலை வெளியிட தாமதிக்கும் பட்சத்தில் அதற்கு மறுவாரத்தில் நாம் தமிழகம் முழுவதும் உள்ள நமது ஆசிரியர் சகாக்களை ஒன்றிணைத்து சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு தொடர்ச்சியான மாபெரும் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சட்டசபையிலும், பொதுசபையிலும் குரல் கொடுத்து வருகின்றன மருத்துவர்.அய்யா மானமிகு. K.கிருஷ்ணசாமி MD, MLA அவர்களின் உதவியுடன் போராட்டத்திற்கு தயாராக இருப்போம்..! தொடர்புக்கு, 1.பழனி -7402384218, 2.அன்பு - 9788899006, 3.ரமேஷ் -9942015830, 4.சிவபிரகாஷ் -7708190788.
ReplyDeleteஆசிரியர் சகாக்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் யாரும் இதை அரசியல் ஆக்க வேண்டாம். நமக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் பின்பற்றி நமது உரிமையை நிலைநாட்ட தயாராக இருப்போம்..!
ReplyDeleteஒற்றுமை பலத்தைக்கொடுக்கும் ! பலம் வெற்றியைக் கொடுக்கும்!.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete