விண்டோஸ் 10 இயங்கு தளம் வரும் ஜூலை மாதம் 29ல் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

விண்டோஸ் 10 இயங்கு தளம் வரும் ஜூலை மாதம் 29ல் அறிமுகம்

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 அடுத்த மாதம் அறிமுகம்: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு ஜுலை மாதம் 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8,
விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு அடுத்த மாதம் வெளியிடப்படும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.விண்டோஸ் 10 இயங்கு தளம் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி அறிமுகமாக உள்ளது.
இந்தியா உட்பட 190 நாடுகளில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் 7, 8.1 இருந்தால் புதிய பதிப்பை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்று விண்டோஸ் 10 பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி