காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாகஉபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த மாவட்டத்தில் வேறு பள்ளி காலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்,''என்றார்.

1 comment:

  1. பல வாரமா இதே முடிவு செய்தி மட்டும் தான் வருது,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி