ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க அழைப்பு

குன்னூரில் செயல்பட்டுவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக பொருத்துநர், கடைசல், கம்மியர், மின்சாரப்பணியாளர் ஆகிய 2 ஆண்டு படிப்புகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக கம்பியாள், தச்சர், பற்ற வைப்பவர் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.அதேபோல,
கூடலூரில் உப்பட்டியிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப செலுத்துவதற்கும் அன்றே கடைசி நாளாகும்.மதிப்பெண் அடிப்படையிலும், அரசு விதிகளின்படி கலந்தாய்வின் அடிப்படையிலும் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்படிப்புகளுக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசமாகும். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் வருகை நாள்களுக்கேற்ப அரசின் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் கட்டணமில்லாப் பேருந்து பயண வசதி, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி ஆகிய சலுகைகளையும் அரசு வழங்குகிறது.
மாநில கல்வித்திட்ட முறைப்படி எஸ்சிவிடி தேர்வு எழுதுபவர்கள், தனித் தேர்வர்களாக மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழுக்கான தேர்வெழுதவும் அனுமதிக்கப்படுவர். அத்துடன், பிரபல முன்னணி தொழில் நிறுவனங்களின் மூலமாக வளாக நேர்காணல் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.இதுதொடர்பான, கூடுதல் விவரங்களை 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி