ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம்

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலால் பணியிட மாறுதல்'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணிபுரிகின்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் :
ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான 'கவுன்சிலிங்'
கடந்த சில ஆண்டுகளாக இணைய தளம் மூலம் நடத்தப்படுகிறது.இதற்கு ஏப்ரல் மாத இறுதியில் விண்ணப்பம் கோரப்பட்டு மே மாதத்தின் இறுதி வாரத்தில் 'கவுன்சிலிங்' முடிந்து ஜூனில் பள்ளி திறந்ததும் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம்.நடப்பு கல்வி ஆண்டிற்கான 'கவுன்சிலிங்'கிற்கு இது வரை விண்ணப்பம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 27 ல் நடைபெற உள்ளதால் 'கவுன்சிலிங்' தொடர்பாக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில்'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகதெரிகிறது. அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் பேரம் பேசி கல்வி அதிகாரிகள் மூலம் பணியிட மாறுதல் வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் காலியில்லை என கூறப்படுகிறது.
தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்குரிய முன்னுரிமை அளித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான முறையான அறிவிப்பில்லை. இதனால் தகுதியான வெளி மாவட்ட ஆசிரியர்கள்ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்” என்றனர்.

18 comments:

  1. due to politics crisis people suffer lots. the politican should understand the feelings of teachers and other govt employees, common people. pls conduct the counselling with honestly. due to influences only common people crushed

    ReplyDelete
  2. So adw list ithanal than publish pana matrangla????????

    ReplyDelete
  3. thanks to kalviseithi for remove unwanted comments.

    adw list eppo

    ReplyDelete
  4. Niraya teachers entha counsellingkaaka kaaththukondu ullanar. Kanavan oru edaththelum manaiviyum kuzhanthaikalum veru oru maavattaththilum erukkum kashtam ungalukku puriyavillaya?

    ReplyDelete
  5. sgt adw list eppo varum

    please ask trb (govt) and publish the information of "WHEN WILL SGT ADW LIST WILL PUBLISH"

    this week or this month?

    next week or next month?


    ReplyDelete
  6. கடலுார் மாவட்டத்தில் அரசுஉதவி பெறும் பள்ளியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது தொடர்பிற்கு nsdinfotech@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Sir Tamil vacant irukka? Amount evalavu?

      Delete
    2. Sir this is parthiban. BT asst in English. Tet passed candidate with 86 . send ur cell number to be in touch with u

      Delete
  7. Anybody tell pls .. What about deployment posting ? When will be the councelling for these candidates ..?

    ReplyDelete
  8. 90ku mela edutha namaku job kidaikuma illaiyatetku prefer pannathan

    ReplyDelete
  9. ADW & KALLAR schools ku posting appointment kodukkamal, TET no chance

    ReplyDelete
  10. The world is full of water we have to know the way in which we come out to the soil

    ReplyDelete
  11. any one like to mutual transfer for sathiyamangalam from inbetween attur to kallakurichi english BT only contact 9629820626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி