வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு அரசுத் துறைகளிலும் ஜீப் ஓட்டுநர் உள்ளிட்ட சில பணியிடங்கள் டெக்ஸ்கோ நிறுவனம் மூலமாக அவுட்சோர்சிங் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.இந்நிறுவனத்திடம் தகுதிவாய்ந்த ஓட்டுநர்கள் இல்லாதநிலையில், தடையின்மை சான்று பெற்று வேலைவாய்ப்பகம் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தடையின்மை சான்று பெறுவதற்கு காலதாமதம் ஆவதால்வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக இருப்பதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கூறி வந்தது.

மேலும் இப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. அண்மையில், வருவாய்த் துறை அலுவலர் சங்கம் இந்த கோரிக்கை உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தது. பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக, வருவாய்த் துறையில் காலியாக இருக்கும் 142 ஜீப் ஓட்டுநர்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை வருவாய்த் துறைச் செயலர் ஆர்.வெங்கடேசன், ஜூன் 23 ஆம் தேதி பிறப்பித்துள்ளார். இதன்படி, தமிழகம் முழுவதும் வருவாய்த் துறைகளில் காலியாக உள்ள 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களில், நடப்பு நிதியாண்டில் (2015-16) 71 இடங்களையும், அடுத்த நிதியாண்டில் (2016-17) 71 இடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி