புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது:-
பூமி, சந்திரன், சூரியன் இடையே புவிஈர்ப்பு விசை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. இதனால் பூமி தன்னைத்தானே சுற்றிவர 86,400.002 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.ஒவ்வொரு நாளும் இவ்வாறு உள்ள கூடுதலான நேரம் பல ஆண்டுகளாக சேர்த்து கணக்கிடும்போது அது ஒரு வினாடி ஆகிறது. எனவே ஜூன் 30 அல்லது டிசம்பர் 31–ந்தேதிகளில் லீப் வினாடி கணக்கிடப்படும்.

இந்த ஆண்டு ஜூன் 30–ந்தேதிஅதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) லீப் வினாடி வருகிறது. சாதாரண நாட்களில் சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் 23:59:59 முடிவடைந்தவுடன் அடுத்த நாள் 00:00:00 என தொடங்கும்.ஆனால் இன்று 23:59:60 என கணக்கிடப்பட உள்ளது. அதன் பிறகே அடுத்த நாள் தொடங்குகிறது. அதன்படி இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும். என்று கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி