ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி?

ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வங்கிக் கணக்கு மூலமாக மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்கவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக டெல்லியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், ரொக்கமாக பணம் கைமாறுவதால் ஏற்படும் கருப்புப் பண நடமாட்டத்தைத் தவிர்க்க முடியும் என்று அரசு நம்புவதாகவும் நிதியமைச்சக உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வரிச்சலுகை போன்ற வசதிகளை அரசு அளிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 2011 ஏப்ரல் நிலவரப்படி 23 கோடியாக இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள், சென்ற ஏப்ரல் மாதத்தில் 56 கோடியாக, இரண்டு மடங்குக்கு மேல்உயர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி