குரூப் - 1' பிரதான தேர்வில், மாற்றுத்திறனாளிக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம்வழங்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்; மாற்றுத்திறனாளி
. அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த இவர், எம்.எஸ்சி., முடித்துள்ளார். குரூப் - 1 தேர்வுக்கு, 2013ல் விண்ணப்பித்தார்; முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றார்.கூடுதல் நேரம் :பிரதான தேர்வு, ஜூன், 5 முதல், 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில், கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் தாக்கல் செய்த மனு:குரூப் - 1 பிரதான தேர்வில், ஆறு பாடங்கள் எழுத வேண்டும். ஒவ்வொன்றுக்கும்,மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும்.
என்னால், மூன்று மணி நேரத்தில் தேர்வை எழுதிமுடிக்க முடியாது; கூடுதல் நேரம் வேண்டும்.கடந்த, 1993ல், சமூகநலத் துறை பிறப்பித்த அரசாணையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுத்துத் தேர்வில், ஒரு மணி நேரம் வரை கூடுதலாக பெறஉரிமை உள்ளது.கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, கடந்த ஏப்ரலில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பிரதான தேர்வில் கூடுதல் நேரம்ஒதுக்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.முருகேசன், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வழக்கறிஞர் நிறைமதி ஆகியோர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கடந்த 1993ல், சமூகநலத் துறை பிறப்பித்த உத்தரவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு மணி நேரத்திற்கு மிகாமல், கூடுதல் நேரம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கவில்லை அவ்வாறு இருக்கும்போது கூடுதலாக, 30 நிமிடங்கள் வழங்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., கூறுவதை எதிர்பார்க்கவில்லை.எனவே, சமூகநலத் துறை பிறப்பித்த அரசாணையின்படி, மாற்றுத்திறனாளியான மனுதாரருக்கு, குரூப் - 1 தேர்வு எழுத, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி