25% இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்த்த ஏழை மாணவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

25% இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்த்த ஏழை மாணவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாவட்ட வாரியாக எத்தனை ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்? என்ற பட்டியலை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தொடக்க நிலை வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு)25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இதற்கு ஆகும் செலவை (அரசு நிர்ண யித்த கல்விக் கட்டணம்) மத்திய,மாநில அரசுகள் சம் பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு வழங்கிவிடும்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 2015-16-ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வெளியிடுமாறு ஒரு வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலை யில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை (www.tnmatricschools.com) மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனியார் பள்ளிகள், அங்கு தொடக்கநிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 3,720 தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி