முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

அகில இந்திய முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஜுலை 25-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய கல்வி வாரியம்கூறியுள்ளது.
இந்த நுழைவுத் தேர்விற்கு புதிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள படமாட்டது என கூறப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பான விவரங்களை www.aipmt.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மேமாதம் சிபிஎஸ்இ சார்பில் நாடு முழுவதும் அகில இந்திய முதல்நிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த தேர்வின் வினாத்தாள் முன் கூட்டியே வெளியானதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் 44 மாணவர்கள் பயனடைந்தது நிரூபணம்செய்யப்பட்டடுள்ளது என்றும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் வாதங்கள்முன் வைக்கப்பட்டன.

அப்போது ஒரு மாணவர் முறைகேடாக பயனடைந்தாலும் அது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும் என கடந்த 15-ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி