கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது:தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது:தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் கவிதாமணி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொது தேர்வை எழுதினார்.
இந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் மாணவி கவிதாமணி தோல்வி அடைந்தார். பொருளியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்திருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மறு கூட்டலுக்கும், திருத்தப்பட்ட விடைத்தாள்நகல்களை பெறுவதற்கும் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு விடைத்தாள் வழங்கப்பட்டதுவிடைதாளை பார்த்தபோது அது மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.முதல் பக்கத்தில் ரோல் நம்பர் மற்றும் அவருடைய புகைப்படம், கையெழுத்து ஆகியவை சரியாக இருந்தது. அடுத்த பக்கத்தில் அதாவது 2–ம் பக்கத்தில் இருந்து அனைத்து பக்கங்களும் மாறியிருந்தது.வேறு ஒரு மாணவியின் விடைத்தாள் அதில் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்து அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.வேறு ஒருவருடைய விடைத்தாளை மாணவி கவிதாமணி எழுதிய பொருளியல் விடைத்தாளுடன்இணைத்து திருத்தியதால் அவர் தோல்வி அடைந்தார்.இது குறித்து அவர் தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விடைத்தாள் மாறியுள்ளது குறித்து மாணவி கவிதாமணி கூறியுள்ளதாவது:–பொருளியல் பாடத்தை நான் நன்றாக எழுதினேன். 100 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தேன்.ஆனால் அதில் 24 மதிப்பெண்கள் கிடைத்தது அதிர்ச்சியை அளித்தது. எனது விடைத்தாள் மாறியுள்ளது. விடைத்தாள் மாறியுள்ளதால் தான் நான் தோல்வி அடைந்துள்ளேன்.இதனால் மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை.இது பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை கடந்த ஒரு வாரமாக அலைய விடுகிறார்கள். எனக்கு நியாயம்கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.இச்சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்புபிளஸ்டூ விடைத்தாள் மாறியதாக கிருஷ்ணகிரி மாணவி கவிதாமணி கொடுத்த புகாரில்அவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளியல் பாடத்தில் அவர் 24 மார்க்குகள் பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் விடைத்தாள் மாறியதாக கூறப்பட்டது. தற்போது உண்மையான விடைத்தாள் வேலூரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மாணவி 123 மார்க்குகள் பெற்ற தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி