7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள, 7,000 நர்ஸ்கள் இடத்திற்கு, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு, வரும் 28ம் தேதி நடக்கிறது.அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தொடர்ந்து,
’நேரில் வந்தால் போதும்; தேர்வு’ என்ற அடிப்படையில், எந்த தேர்வுமின்றி, 400 எம்.எஸ்., - எம்.டி., முடித்த சிறப்பு பிரிவு டாக்டர்கள் சேர்க்கப்பட்டனர்.இதை தொடர்ந்து, 451 ஆண் நர்ஸ்கள் உட்பட, 7,243 நர்ஸ்களை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்க்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, ’ஆன் லைன்’ வழியே விண்ணப்பிக்க வேண்டும். 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், ஐந்தில், ஒருவருக்கு தான் பணி கிடைக்க உள்ளது.
  இதற்கு தகுதியானோர் யார் என்பதற்கான எழுத்துத் தேர்வு, இம்மாதம், 28ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், முதன் முறையாக, நர்ஸ் பணிக்கு, அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி