மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய,இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், அரசின் உதவிகளை பெறுவதற்காக அலையவேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்காக, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டை, அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.'ஆதார்' எண் போல், இந்த அட்டையிலும், ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். இந்த அட்டையில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றிய அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
இந்த அடையாள அட்டையை வைத்து, அரசின் சேவைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம். வரும் டிசம்பர் மாதம் முதல், இந்த அடையாள அட்டைக்கான பணிகள் துவங்கவுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி