தீர்ந்தது குழப்பம்: சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

தீர்ந்தது குழப்பம்: சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

நாளை ஜூன் 5-ம் தேதி முதல் சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும்(http://www.tndalu.ac.in/)வெளியிடப்பட்டுள்ளது.5 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை ஜூன் 22-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் எனவும் தரவரிசைப் பட்டியல் ஜூன் 25-ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.3 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி, தர வரிசைப் பட்டியல் ஜூலை 10-ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ந்தது குழப்பம்:

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், சட்டப் படிப்புக்கு இன்னும் விண்ணப்பம் வழங்கப்படாததால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.
முன்னதாக, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு பிஏ, எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு மே 8-ம் தேதி முதலும், அதேபோல் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு மே 14-ம் தேதி முதலும், 3 ஆண்டு படிப்புக்கு மே 25-ம் தேதியில் இருந்தும் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கடந்த மே 3-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால், மே 8-ம் தேதி 5 ஆண்டு கால பிஏ.எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு விண்ணப்பம் வழங்கப்படவில்லை. இதனால் விண்ணப்பம் வாங்க வந்த மாணவ-மாணவிகளும், பெற்றோரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.எப்போது விண்ணப்பம் வழங்கப்படும்? என்று அறிவிப்பு ஏதும் வெளியிடாத நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தினசரி ஏராளமானோர் வந்து ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.
அதன்பின்னரே "விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மாணவர்கள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் நாளை முதல் சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி