கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தஉத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தஉத்தரவு

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் களின் கல்வித்தரத்தைமேம்படுத்த மாதந்தோறும் ஆண்டாய்வு மேற் கொள்ளுமாறு உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக உதவி தொடக் கக் கல்வி அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண் ணிக்கையிலான பள்ளிகளில் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
18 பள்ளிகள்
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தலா 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்வதுடன் தலா 18 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்.
12 பள்ளிகள்
இதேபோல், செப்டம்பர், டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் தலா 2 பள்ளிகளில் ஆண்டாய்வு மேற்கொள்வதுடன் தலா 12 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி