விலை குறைந்த யு.பி.எஸ்.,; கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

விலை குறைந்த யு.பி.எஸ்.,; கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு

மதுரை:கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது என மனம் பதறும் வேளையில் எளிய விலை குறைந்த யு.பி.எஸ்., கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்.
இந்த யு.பி.எஸ்., சாதனத்தின் சிறப்பே நடுத்தர மற்றும் ஏழைகளும் வாங்கும் விலையில் இருப்பது தான்.இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜேந்திரபிரசாத் வழிகாட்டுதலில் உதவி பேராசிரியர் ஞானசேகரன் உதவியுடன் மாணவர்கள் சல்மான் பார்சி,விக்னேஷ் குமார், விஜய் ஆனந்த், ராஜேஷ்குமார் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.கண்டுபிடிப்பு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
தானியங்கிகளில் பயன்படும் மின்கலம் மின்விசிறி, எல்.இ.டி., பல்பு மற்றும் தானியங்கி சாதனங்களை பயன்படுத்தி யு.பி.எஸ்., சாதனத்தை தயாரித்துள்ளனர். இதன் விலை ரூ.5000லிருந்து என தற்காலிகமாக திட்டமிட்டுள்ளனர். சிறிய குடும்பத்திற்கான ஒரு மின்விசிறி, மூன்று பல்புகளை இந்த மின்கலம் மூலம் தொடர்ந்து ஆறுமணி நேரம் இயங்கச் செய்யலாம். இதன் ஆயுள் மூன்றாண்டுகள். தானியங்கி பாகங்களை பயன்படுத்தி சொந்தமாக தயாரிக்கலாம்.இதன் உதிரி பாகங்கள் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும். மிகவும் பாதுகாப்பானது. மொத்தமாக உற்பத்தி செய்யும் போது விலை இன்னும் குறையலாம் என்றனர்.
மின்கலம் தயாரித்த மாணவர்களை கல்விக் குழுமத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதல்வர் நெல்சன் ராஜா பாராட்டினர் என்றார்.
மாணவர்களை பாராட்ட 99429 82433.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி