பி.இ. சேர்க்கை: சமவாய்ப்பு எண் இன்று வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

பி.இ. சேர்க்கை: சமவாய்ப்பு எண் இன்று வெளியீடு.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) திங்கள்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது.
மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும்,மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்தது. வெறும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்முறை சமர்ப்பித்தனர்.

இன்று சமவாய்ப்பு எண்:

இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.உடனடியாக இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

சமவாய்ப்பு எண் எதற்கு

ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணிதப் பாடத்தோடு இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும்.இந்த ரேண்டம் எண் மதிப்பு அதிகம் உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்:இப்போதைய நிலவரப்படி 1.80 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர கலந்தாய்வில் இடம்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கலந்தாய்வு தொடங்கிய பின்னர் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டுஇடங்களை ஒற்றைச்சாளர கலந்தாய்வுக்கு ஒப்படைப்பார்கள் என்பதால், இடங்களின் எண்ணிக்கை 2.20 லட்சத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில், 1.54 லட்சம் பேர் மட்டுமே இம்முறை விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முக்கியத் தேதிகள்:ரேண்டம் எண் வெளியீடு: ஜூன் 15

தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 19

விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 28

மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 29

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூலை 1 முதல் 31 வரை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி