'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2015

'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்'

பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் வழங்கவும், பகுதிநேர ஆசிரியர் நிலையை, முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும்,
பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று, காஞ்சிபுரம் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 'பகுதிநேர ஆசிரியர்கள் என்ற நிலையை மாற்றி, பணி நிரந்தரம் செய்து, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட, நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி