அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசின் முழு செலவில், தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியருக்கான தேர்வுகள்துவங்கின. ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க,
தனியார்பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்தை, அத்துறை, ஆறு ஆண்டாக செயல்படுத்தி வருகிறது.இதில், 6ம் வகுப்பு; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என, இரு பிரிவு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 385 வட்டாரங்களில், அரசு பள்ளிகளில், 5ம் வகுப்பு படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், தலா ஒருவர் வீதம், தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு செலவில் படிக்க வைக்கப்படுவர். பிளஸ் 2 வரை, இவர்களுக்கான முழுச் செலவையும் அரசு ஏற்கும்.

திட்டத்தின் மற்றொரு பிரிவாக, அரசு பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், மாவட்டத்திற்கு, 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர். அவர்களை சிறந்த தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்த்து, கல்வி செலவு அனைத்தும் அரசு ஏற்கிறது. இதற்காக, ஆண்டிற்கு, 1.80 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான தேர்வு தற்போது துவங்கியுள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எல்லா மாவட்டங்களிலும் தேர்வு முடிந்ததும், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'அட்மிஷன்' நடைபெறும்' என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி